அத்திக்கடை (Athikkadai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கூத்தாநல்லூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். தெற்கில் மன்னார்குடி, வடக்கில் கும்பகோணம், கிழக்கில் திருவாரூர் மற்றும் மேற்கில் தஞ்சாவூர் நகரங்கள் அத்திக்கடைக்கு அருகில் அமைந்துள்ளன.
வரலாறு:
இந்த பகுதி பண்டைய மன்னர்களான மன்னர் நவாப் மற்றும் மன்னர் இரண்டாம் சரபோஜி ஆட்சிகாலத்தில் ஹாதிகாடு என்ற பெயரில் ஒரு குடியிருப்பு கிராமமாக உருவெடுத்தது.
இதன் பொருள் ஹாதி என்ற மரம் நிறைந்த காடு என்பதாகும். காலப்போக்கில் “ஹாதி காடு” அத்திக்கடை என்று மருவியது. “ஹாதி” என்றால் இந்தியில் யானை என்று பொருளுண்டு. ஆகையால் இது யானை காடு என்றும் அறியப்பட்டது.
மேலும் தமிழில் ஹாதி “ஆத்தி” என்று வடிவ மாற்றம் பெற்று அத்தி மரத்தையும், “காடு” என்றால் காடு என்று பொருளையும் தருகிறது. ஆகையால் அத்தி மரம் நிறைந்த காடாகவும் இருந்திருக்கலாம். இந்தக் கிராமம் முஸ்லிம் ஜமாத் தலைவர்களால் (மசூதி / மஸ்ஜித் நிர்வாகி மற்றும் கருவூலம்) நிர்வகிக்கப்படும் ஒரு நவீன கிராமமாகும். இந்த இடத்தில் வசிப்பவர்கள் மரணம், திருமணம், சட்டங்கள், உயில் மற்றும் வர்த்தகம் போன்ற சந்தர்ப்பங்களில் ஜமாத்தை சார்ந்துள்ளனர்.
அத்திக்கடையில் பாலக்குடி என்பது அத்திக்கடையின் இரண்டாவது முக்கிய பகுதியாகும். இங்கு 200 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற இஸ்லாமிய தர்கா அமைந்துள்ளது. இந்த தர்கா செய்யது உமர் ஒலியுல்லா என்ற நல்லடியாரின் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சாதி, மதம் போதமின்றி மக்கள் தர்காவிற்கு வந்து செல்கின்றனர். ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மக்கள் இந்த புனித தர்காவை பார்வையிடுகிறார்கள். இந்த பகுதி திருவிடைவாசல் ஊராட்சி மன்றத்திற்கு கீழ்வுள்ள பகுதியாகும். இங்கு தான் பழமையான ஆயிரம்மன் கோயிலும் அமைந்துள்ளது.
நவாப் மன்னர் அத்திக்கடைக்கு விஜயம் செய்தபோது பாரம்பரிய கட்டிடக்கலை கொண்டு ஒரு இறையில்லத்தை கட்டிக்கொடுத்தார். அந்த இறையில்லத்தின் பெயர் பெரிய பள்ளி. இந்த பள்ளி அத்திக்கடையின் கம்பீர அடையாளமாக திகழ்கிறது. இது 500 ஆண்டுகள் பழமையானது. இப்பள்ளியை அத்திக்கடை முஸ்லீம் ஜமாத்தின் கீழ் பராமரிப்பில் உள்ளது .
| PIN | 613702 |
| Area | 3.02 km² |
| District | Thiruvarur |
| Telephone code | 04366 |
Google Map:
Source: Wikipedia
Disclaimer: The information provided on this website is published for the convenience and general guidance of users. While we strive to keep the content accurate and up to date, we make no guarantees of any kind, express or implied, about the completeness, accuracy, reliability, or suitability of the information.
#About_Athikkadai #Athikkadai #Athikkadai_History #அத்திக்கடை #அத்திக்கடை_வரலாறு


