Psychology of Money
Psychology of Money

The Psychology of Money Book | பணம் சார் உளவியல் புத்தகம்

மார்கன் ஹவுசல் எழுதிய ‘தி சைக்காலஜி ஆஃப் மணி’ (The Psychology of Money) என்ற நூலை மக்கள் படிக்க வேண்டும்; ஏனெனில், இது கணிதத்தை விட மனித நடத்தையை மையமாகக் கொண்டது, உண்மையான செல்வத்திற்குப் புதிய விளக்கத்தை அளிக்கிறது மற்றும் பொறுமையின் ஆற்றலையும் கற்றுத்தருகிறது. நிதிசார் வெற்றியைப் பொறுத்தவரை, 80% பங்கு உங்கள் செயல்பாடுகளையும், 20% பங்கு மட்டுமே உங்கள் அறிவையும் சார்ந்திருக்கிறது.

பணத்தை எப்படி சம்பாதிக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வதற்கு ஆயிரமாயிரம் புத்தகங்கள் இங்கே உள்ளன. ஆனால், கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை எப்படி கையாளுவது, எப்படி சேமிப்பது என்பதை தெரிந்துகொள்வதற்கு நீங்கள் ஓர் புத்தகத்தை வாசிக்க நினைத்தால் அந்த வரிசையில் முன்னால் இருக்கத் தகுந்த புத்தகம் இந்த பணம் சார் உளவியல் புத்தகம். ஆங்கிலத்தில் “The Psychology Of Money” என்ற புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு தான் இது.

திரைப்பட நடிகர் அரவிந்த் சாமி ஒரு நேர்காணலில் இந்தப் புத்தகத்தை இளைஞர்கள் படிக்க வேண்டும் என சொன்னபிறகு பலரும் இந்த புத்தகத்தை தேடி படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். நீங்களும் படிக்க விரும்பினால் கீழே உள்ள மின்-நூலை பார்க்கவும்.

இன்பமான வாழ்க்கைக்கு பணம் முக்கியமல்ல என பலர் பேசுவார்கள். ஆனால், அப்படி சொல்கிறவர்களை கவனித்து பார்த்தால் அவர்களிடம் போதிய அளவில் பணம் இருக்கும். அதற்கு பின்பு தான் ஞானம் வந்தது போல பேசுவார்கள். இந்த உலகில் வாழ்வதற்கே குறிப்பிட்ட அளவு பணம் இருக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப எவ்வளவு பணம் தேவை என்பதில் மாற்றம் இருக்கலாம். ஆனால், முற்றிலும் பணம் இல்லாமல் எவராலும் இருக்க முடியாது.

#PsychologyOfMoney #TamilEBook #Athikkadai

Thamizh Bazaar Ad

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *